Friday, May 9, 2014

கற்ப மூலிகை ஆடாதோடை

கற்ப மூலிகை ஆடாதோடை/ஆடாதோடா/Adhatoda zeylanica
மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.
எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும். இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. .
நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.
நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது

Thursday, May 8, 2014

யோகம்

அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30 கருத்து உரையுடன் !!! பகுதி ஒன்பது0( உயர்நிலை வாசி யோகம்)
கோடிஇல் ஒருவர் ஞாநி ஆவர்!!. அது நீங்களா? அகத்தியர் செய்த வாசியோகம் அறியவேண்டுமா? சித்த்ருடன் பேச வேண்டுமா ? தொடர்ந்து இந்த பதிவை படிங்க !!உள்வங்குங்க!!! கேள்வி கேளுங்க !!!
. அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30 பாடல் பத்து .
ஐந்தெழுத்தைமாறி வுச்சரிக்க வேணும்
வாமென்றவிடகலையில் ஓம் சிங்-வங்-யங் -நங்-மங்- சிவயநம யென்று
வளமையுடன் ஆமென்றும்ஓமென்றும் வங்-யங்-ஓம்-யவசிமந வென்று
சிகாரமதையறிய வேணும்
தூமென்றசுழிமுனைக்கி ஓம்-மங்-நங்-யங்-வங்-சிங்
ஓம்-சிவயநம வென்று சூட்சமாய்நகாரத்தையறியவேணும்
தாமென்றமவுனத்தால் தியானஞ்செய்து
சதாசிவமாம்சுழிமுனையி னொளியைப்பாரே 10
பார்க்கையிலே பவளவொளி பச்சைநீலம்
பருவான பொன்பசுமை வெண்மையைந்தும்
சேர்க்கையிலே சூரிய னுதயம்போல
செகசோதி பூரணத்தின் காந்தி தானும்
ஆர்க்கையிலேகொடுத்த பொருள் வாங்குமாப் போல
ஐந்துருவுமொன்றான வடிவேதோணுங்
காப்பதுதபன் திருவடியே சரணமென்று
காத்தவர்க்குத்தீங்கில்லை கருணைதானே 11
பொருள் பாடல் பத்து
பதிவு எட்டு மற்றும் ஏழில் அடிப்படை வாசி யோகம் செய்வது பற்றி பார்த்தோம் . இரண்டு நாசி துவரம் வழி யாக மூச்சை இளுத்து காலக் கணக்க்கு ௩௨; ௬௪; ௧௬ ( முப்பத்தி இரண்டு ; அறுபத்தி நான்கு; பதினாறு ) படி பிராணயாமம் செய்வது அடிப்படை பிராணயாம வாசியோகம் .
பாடல் பத்தும் அதன் மேலும் , உயர் நிலை வாசி யோகம் சொல்கிறார் . இதை நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் குருவின் உதவியுடன் பயிற்சி செய்வது நன்று
நமது உடலில் முதுகு தண்டு பகுதியில் ஆறு ஆதர தளங்கள் உள்ளன அவற்றில் பஞ்ச பூத ஒடுக்கமும் விரிவும் உள்ளது . இந்த ஆறு தளத்திலும் அதற்கு உரிய பீஜமந்திரத்தை உச்சரித்து வாசியோகம் செய்யா வேண்டும் மூலதாரத்தில் குண்டலி சக்தியை எழுப்பி அங்கு இருந்து ஓவ ஒரு ஒருதளமாக மேலே ஏற்றவேண்டும்
குண்டலி சக்தி என்பது காற்றும் வெப்பமும் சேர்ந்த அலை கற்றை . இந்த அலை கற்றை சுழிமுனை அடையும் இந்த அலைகற்றை மேலே ஏறும்போது பஞ்சபூதங்களும் இதனுடன் இணையும் . மூலதாரத்தில் இருந்து நாதம என்ற பெண் பாம் பும் ( இடகலை அல்லது சந்திரகலை ) விந்து என்ற ஆண் பாம்பும் (பின்க்களை அல்லது சூரிய கலை) ஓவ ஒரு தளத்திலும் இணைந்தும் பிரிந்தும் சென்று சுழி முனை இல் சேரும் என்று உருவாக படுத்துவார்கள் நாதமும் விந்துவும் இணையும் போது அக்கினிகலை உருவாகும் . இந்த அக்கினி கலை வழிபபடி சுழி முனை நாடி உருவாகும் . இந்த சுழிமுனை நாடி மூலதாரத்தில் இருந்து சுழிமுனை நோக்கி மேலே எழுமபும் அப்பொழுது சுழிமுனை திறக்கும் .
சுழி முனையில் சூரியகலை சந்திரகலை அக்கினி கலை ஆகியவை ஒனறுசேரும் அது போல் ஒன்பது நாடியுடன் பத்தாவது நாடி யாகிய சுழிமுனை நாடியும் ஒன்று சேரும் . அப்பொழுது சுழி முனையில் ஒளிபிறக்கும் . இந்த ஒளியே வாலை. இதுவே பூரணம் . இதுவே அகத்தீ . இதுவே உள்ளுரையும் இறைவன்
இந்த ஒளி சிவப்பு பச்சை, நீலம , மஞ்சள் ஆகிய நிறங்கள் கொண்டது . இவற்றை உள்ளடக்கிய வெண்மையாகவும் தோன்றும் . இவற்றின் கலவையாகஉம தோன்றும் .
இப்பொழுது நமசிவய என்ற பஞ்ச பூதம் விரிவு பெற்று மீண்டும் ஒன்றாகியது . இந்த உள் ஒளியை காண, குருவிடம் சரண் அடைந்து குருவின் கருணையினால் காண்பவர்க்கு தீங்கு இல்லை
.
இப்பொழுது ஆறு ஆதார தள பீஜ மந்திரம் அங்கு இருக்கும் பஞ்ச பூதம , தெய்வம் விவரம் பார்ப்போம் நமசிவய என்பதை சிவயநம என்று மாறி உச்சரிக்க வேண்டும்
ஆறு தளத்தில் சிவயநம என்ற மந்திரமாகவும் , ஐந்துபூத மாகவும் இறைவன் இருக்கிறான் அவைகள்
மூலாதாரம் .: பஞ்ச பூதமும் ஒடுங்கிய நிலை . ஓம் என்பது மந்திரம் தெய்வம் கணபதி .+ வல்லபை
சுவதிச்டணம் .. பூதம் =.... மண் , மந்திரம் = சிங் தெய்வம் =பிரம்மா +சரஸ்வதி
மணிபூரகம் .. பூதம் = நீர் , மந்திரம்=வங், தெய்வம் விஷ்ணு+ லட்சுமி.......
அனாகதம்...... பூதம்= நெருப்பு , மந்திரம் = யங் தெய்வம்= ருத்திரன் + ருத்திரி
விசுக்தி ...... பூதம் = காற்று, மந்திரம்= நங் தெய்வம் = மகேஸ்வரன் + மகேஸ்வரி
ஆக்ஞா ..... பூதம் =ஆகாயம் , மந்திரம்= மா தெய்வம் =சதாசிவம்+மனோன்மணி
அன்பு நண்பர்களே இந்த விளக்கம் கடல் போன்ற படிப்பை சிறு குடத்தில் அடைத்தது போன்றது . யோகா வழி அறிமுகம் இல்லாதவர்க்கு விளங்குதல் கடினம் . மீண்டும் மீண்டும் படியுங்கள் . இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !! .